“மீனவர்களின் வலியை இந்த படத்தில் தெரிஞ்சுக்கிட்டேன்!”நடிகர் சூரி

 

அப்போது அவர் பேசுகையில், திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது எனவும், ஒவ்வொரு ஊரிலும் படம் குறித்தான பிரமோஷன் நடைபெற்று வருகிறது, இரண்டு நாள் கோவையில் தான் இருப்போம் என்றார்.

 

மீனவர்களுக்கான ஸ்பெஷல் ஷோ தற்பொழுது வரை எதுவும் முடிவு செய்யப்படவில்லை எனவும், அதனை தயாரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

 

இந்த திரைப்படம் மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என நம்புவதாகவும், ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பாய்மர படகு போட்டி பல வருடங்களாக நடைபெற்று வருகிறது, இந்த விளையாட்டை உலகம் முழுவதும் சேர்க்கின்ற படமாக இந்த படம் இருக்கும் என குறிப்பிட்டார்.

 

இந்தப் போட்டி பலருக்கும் தெரியாது, இதனை திரைப்படமாக பார்க்கும் பொழுது அனைவருக்கும் புதுவிதமான அனுபவமாக இருக்கும் எனவும், மீனவர்கள் சார்ந்த பிரச்சனைகளும் படத்தில் உள்ளது அதனை படத்தில் பார்த்தால் அனைவருக்கும் தெரியும், அதனை முன்கூட்டியே கூறிவிட்டால் சஸ்பென்ஸ் போய்விடும் என்றார்.

 

பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லாமல் ஒரு தேவையான படமாகவும் இது இருக்கும் என்றவர், மீனவராக நடித்தது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன், இதை ஒரு அனுபவம் ஒரு வாழ்க்கை படமாக நான் கருதுகிறேன் என தெரிவித்தார்.

 

அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்கு தெரியாது, காமெடியனாக இருந்த என்னை மக்கள் ஒரு கதாநாயகனாக கொண்டு வந்து இருக்கிறார்கள், மக்கள் அங்கீகரித்தாலே யாராக இருந்தாலும் ஒரு துறையில் இருக்கலாம். மக்களுக்கு தேவையான படங்களை கொடுப்பதற்கு நான் ஆசைப்படுகிறேன் என கூறினார்.

 

சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கிறீர்களா பொதுமக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற கேள்விக்கு, அது மிகவும் நல்ல விஷயம், காலை முதல் மாலை வரை சட்டசபையில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிகிறது. குழந்தைகள் முதல் அனைவரும் சட்டமன்றம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயம் என்றார்.

 

நடிகர் விஜய் இல்லாத சினிமா துறை என்பது, அந்த இடம் ஒரு ஏமாற்றம் தான் என கூறியவர், அடுத்த திரைப்படம் அயலான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனருடன் நடிக்கப் போகிறேன் செப்டம்பர் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என நினைக்கிறேன் என்றார்.

 

மீனவர்களில் ஒருவனாக நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம், மீன் வாங்குவதில் நாம் பேரம் பேசுகிறோம், ஆனால் அந்த மீனுக்காக மீனவர்கள் கடலுக்குள் சென்று உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் செல்கிறார்கள், மீனவர்களின் வலியை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன், மீனவர்கள் எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டும் அவர்களுக்கான பாதுகாப்பாக அனைவரும் இருக்க வேண்டும், மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் அனைத்து துறைகளிலும் அவர்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என தெரிவித்தார்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்