கோவை
குரும்பர் சமுதாய அரச குல தாயாதிகளுக்கு பாத்தியப்பட்ட கோவில் விழாவில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு
கோவை மாவட்டம் மயிலேறிபாளையம் பகுதியில் குரும்பர் சமுதாய அரச குல தாயாதிகளுக்கு பாத்தியப்பட்ட அருள் மிகு திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது..
இந்நிலையில் இக் கோயிலின் 24-ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு,திருக்குட நன்னீராட்டு பெரு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
முகூர்த்த கால் நடுதலோடு துவங்கிய விழாவில்,முளைப்பாரி இடுதல்,தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்துடன் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள், மூல மந்திர ஹோமங்கள்,முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள்,மகா பூர்ணாகுதி,உட்பட சிறப்பு பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக நன்னீராட்டு பெருவிழா பாலகிருஷ்ண அய்யர் தலைமையில் நடைபெற்றது..
விழாவில், ஓதி மலை சுந்தர சிவனேச அடிகளார் திருமடம் குருமகாசன்னிதானம் சிவனேச அடிகளார் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்..
தொடர்ந்து மூலவர் திரௌபதி அம்மனுக்கு,மகா அபிஷேகம்,அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது..
விழாவில், குரும்பா சமுதாய தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி,மற்றும் நிர்வாகிகள் P. கோபாலன்,C.துரைசாமி,M.மயில்சாமி,P.M.சண்முகம்,G.செந்தில் குமார்,P.M.சரவணன்,E.B.ராஜேந்திரன்,E.பாலமுருகன்,R.K,ரவிக்குமார்,R.K.ராஜ்குமார்,M.D.ஜெயக்குமார்,உள்ளூர் தங்கவேலு,சண்முகம்,சுப்ரமணியன்,மற்றும் குரும்ப அரச குல மக்கள்,பொதுமக்கள்,பக்தர்கள் என பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற மகா அன்னதானத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..