கோவை.
தமிழ்நாடு முழுவதும் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 12 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் ஓட்டுநர் பிரதிநிதிகள் கூட்டம் இன்று வியாழன் ஆகஸ்ட் 6 ம் தேதி, மாலை 4 மணிக்கு பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் ஓட்டுநர் சங்கத்தின் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
கோயம்புத்தூர் லேபர் யூனியன் பொதுச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஏஐடியுசி துணைத் தலைவர் என்.செல்வராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் பாபு, சுரேஷ், பி.முருகேசன், முருகன், அருண், செந்தில், தியாகராஜன், மருதாசலம், சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் அனைத்து வகையான தினக்கூலி தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஆகஸ்ட் 12 ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் செய்வது என தமிழ்நாடு உள்ளாட்சி தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அதை ஏற்று கோவை மாநகராட்சி தொழிலாளர்கள் சார்பாக ஆகஸ்ட் 12 ம் தேதி குனியமுத்தூர் பஸ் நிலையம் அருகிலும், ஆகஸ்ட் 13 ம் தேதி சரவணம்பட்டி காளப்பட்டி பிரிவிலும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும்.
வரும் ஆகஸ்ட் 24 ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் வர இருக்கும் நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையின் போது, நகர உள்ளாட்சிகளில் பணியாற்றும் அனைத்து வகை தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு மனு அனுப்பும் இயக்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அது வரும் ஆகஸ்ட் 14 ம் தேதி மாலை 4.00 மணிக்கு இரயில் நிலையம் முன்பு உள்ள தபால் நிலையத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட தகவலை சங்கத்தின் செயலாளர் என்.செல்வராஜ் தெரிவித்தார்.