"கல்வியில் சிறந்த தமிழ்நாடக" உருவாக்குவதே அரசின் இலக்கு

 

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த தமிழக பள்ளிக்கல்வி, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்கள் தொடர்பாக கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், அவற்றை பரிசீலித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான கல்வி, அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருவதாகவும், மலைவாழ் மக்கள் வசிக்கும் பல கிராமங்களில் இன்னும் பள்ளி மற்றும் போக்குவரத்து வசதிகள் முழுமையாக சென்றடையவில்லை என்றும் கூறினார். சமீபத்தில் வன்னியரசு மேற்கொண்ட முயற்சியால் ஒரு குக்கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு, அப்பகுதி மாணவர்கள் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

கல்வித் துறையில் உலகின் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை "கல்வியில் சிறந்த தமிழ்நாடக" உருவாக்குவதே அரசின் இலக்கு என்றும் அவர் கூறினார்.

பத்திரிகையாளர்களின் நலனில் அரசு அதிக அக்கறை செலுத்தி வருவதாகவும்,  எந்த பாகுபாடும் இன்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் கூறினார் .

பள்ளிகளில் வாரத்திற்கு 40 பாடவேளைகள் நடைபெற்று வருவதாகவும், அதில் 32 பாடவேளைகள் கல்விக்காகவும், 8 பாடவேளைகள் உடற்கல்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்ட நேரம் முழுமையாக அதற்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தனது உத்தரவு என்றும் கூறினார்.

மேலும், பள்ளிக்கல்வித் துறையில் விரைவில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்