மார்க்கெட் போனா இப்படித்தான் பேசுவாங்க

பிக் பாஸ் முடிந்து வரட்டும் விஜய் சேதுபதி முடிவெடுக்கலாம் முற்றுகை குறித்து சூலூர் எம்எல்ஏ பேட்டிசுய விளம்பரத்திற்காகவே நடிகர் விஜய் சேதுபதி தேவையற்ற கருத்துக்களைப் பேசி வருவதாகவும், நிகழ்ச்சியை விட்டு வெளியே வரட்டும் என்ன பேசுகிறார் என்று பார்த்துவிட்டு முடிவு செய்வோம் சூலூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. என்.எம். சுகுமார்  தெரிவித்துள்ளார்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் 
விஜய் சேதுபதிக்கு 
திரைப்பட மார்க்கெட்டை இழந்த பிறகு, மீண்டும் பிரபலமாவதற்காகவே விஜய் சேதுபதி இதுபோன்ற பேச்சுக்களைப் பேசி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியே வந்ததும், அவரின் பேச்சுக்களைப் பொறுத்து அவரை முற்றுகையிடுவது குறித்து ஆலோசிக்கப்படும்.

திமுகவினர் தாங்கள் செய்த ஊழல்களை எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ‘ஊழல் செய்ததை நிரூபியுங்கள்’ என்று கூறுவதே அவர்களின் வாடிக்கை.

 

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படம் தனது வீட்டில் இருப்பதாக வந்த செய்திகளுக்கு விளக்கமளித்த அவர், நான் எழுதிய புத்தகத்தை வைரமுத்து வெளியிட்டபோது எடுக்கப்பட்ட படமே அது. தற்போது அந்த படங்கள் அகற்றப்பட்டு, 7 அடியில் தமிழக முதல்வர் விஜய் அவர்களின் படம் வைக்கப்பட்டுள்ளது
என்று தெரிவித்தார்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்

Feed not found.