கோவை.
கோவையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி இன்று 10.10.2026 மாலை 5.00 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் எஸ்.ஐ.ஆர். மூலம் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார். இது நாடு முழுவதும் மிகப் பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது.
ஞானேஷ்குமாருக்கு எதிராக இரண்டு தேர்தல் ஆணையர்கள் எழுதிய கடிதங்கள் கசிந்துள்ளது. ஞானேஷ்குமார் பதிவிலக வேண்டும் என்றும் அவர் கைது செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி நாடுதழுவிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளது. டெல்லியில் போராடிய இளைஞர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அறிவிக்கப் படாத எமெர்ஜென்சி ( அவசர நிலை ) போல உள்ளது.
எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும், அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோடு சந்திப்பில் மறியல் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைதாகி உள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு மாட்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் ஜே.ஜேம்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வி.ஆர்.பாண்டியன், அஷ்ரப் அலி, கிழக்கு மண்டல செயலாளர் எஸ்.சண்முகம், சையது இப்ராஹிம், ஏ.பி.மணிபாரதி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மாநில குழு உறுப்பினர் ஏ.ராதிகா, சி.ஐடி.யூ. மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் கே.மனோகரன், மாமன்ற உறுப்பினர் வி.ராமமூர்த்தி, என்.ஜாகீர், தினேஷ்ராஜா, கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஞாணேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது.
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- கோவையில் நடைபெற்ற விமன் இந்தியா மூவ்மெண்ட் தேசிய பொதுக்குழுக் கூட்டம்
- கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 23-ஆம் ஆண்டு நினைவு தினம்
- திருவண்ணாமலை மகாதீபம் - பாதுகாப்பு பணிக்காக 15 ஆயிரத்து 500 போலீசார் குவிப்பு.
- மதிமுக"வை யாராலும் அழிக்க முடியாது… திமுக சட்டம் ஒழுங்கு விவாதத்திற்கு தயாரா..?
- "மக்களுக்கு பாதுகாப்பில்லை!" கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி | Breaking News
- திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தவெக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் -
- மதிமுக"வை யாராலும் அழிக்க முடியாது… திமுக சட்டம் ஒழுங்கு விவாதத்திற்கு தயாரா..? வைகோ சரமாரி கேள்வி..
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு, போதைப்பொருள் புழக்கம்அதிகரிப்பு –எடப்பாடி பழனிசாமிகுற்றச்சாட்டு
- மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம் - விழிப்புணர்வு பேரணி;..
- கோயம்புத்தூரில் இன்று துவங்கியது ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026