உறுப்பு தானத்தில் இந்தியாவில் மீண்டும் முதலிடம்! அமைச்சர் அருண்ராஜ்

கோவை

கோவை அவிநாசி சாலையில் உள்ள கே எம் சி எச் மருத்துவமனையில் உறுப்பு கொடையாளர்கள் பாராட்டு விழா மற்றும் மரியாதை கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டார்.

கோவை விமான நிலையம் அருகே உள்ளது, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை இங்கு, உடல் உறுப்பு கொடையாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக வாழ்க்கைக்கு பிறகு வாழ்க்கை என்ற தலைப்பிலான உறுப்புக் கொடையாளர்கள் பாராட்டு விழா மற்றும் மறைந்த உறுப்பு கொடையாளர் மரியாதை கல்வெட்டு திறப்பு விழா சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் திறந்து வைத்தார் 
இந்த நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டவர்கள் காணொளி ஒளிபரப்பப்பட்ட பட்டது. அப்போது உடல் உறுப்பு தானம் செய்த உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை வேதனை படுத்தியது 
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் கூறியதாவது.. 
உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் மாநிலத்துக்கு இந்திய அளவில் அவார்ட் கொடுப்பார்கள் அதன்படி தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது, இறந்தவர்களின் உறுப்பில் கொண்டு தொடர்ந்து உறுப்பு தானம் செய்து வரும் மாநிலத்துக்கு இது வழங்கப்படுகிறது இதில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இந்த விருது வாங்குவதற்காக நான் நாளை டெல்லி செல்கிறேன் இந்த விருதை உடல் உறுப்பு தானம் கொடுத்த கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு காணிக்கையாக்கிறேன், 
உடல் உறுப்பு தானம் கொடுக்கப்பட்டால் கொடுக்கப்பட்டவரின் உடல் சிதைந்து விடும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது அது அப்படி அல்ல என்பது குறித்த விழிப்புணர்வு அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் தேவைக்கு குறைந்த படி தான் நாம் விருப்பமாற்று சிகிச்சை கொடுத்து வருகிறோம் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். மேலும் சாலை விபத்துகளில் இளைஞர்கள் அதிகமாக இறந்து வருகின்றார்கள், அதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அங்கு முதலுதவி சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள கடைகள் மற்றும் மற்ற இடங்களை ஆராய்ந்து அங்கு சிகிச்சை பெறுவதற்கான வழிவகைகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட உள்ளது என கூறினார். 
தொடர்ந்து பேசியவர், முதல் உதவி செய்யக்கூடிய ட்ரெயினிங் ப்ரோக்ராம் குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது எனவும், 
Air ஆம்புலன்ஸ் தேவை தமிழகத்திற்கு தேவைப்படுகிறது அது விரைவில் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் சுகாதார குறைபாடுகள் உள்ளது, என்ற கேள்விக்கு, நான் ஆய்வு செய்த 
மருத்துவமனைகளில், சுகாதாரம் குறைவாக இருந்தது என்பது கடந்த இரண்டு மாதங்களாக வரவில்லை, கடந்த காலங்களில் அவை கட்டுப்படுத்தாத காரணத்தினால் வந்துள்ளது, அதைக் கட்டுப்படுத்த தற்போது வந்துள்ள அரசு அனைத்து முயற்சிகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த அரசு நேர்மையான ஊழலற்ற அரசு அதைத்தான் செய்து வருகிறோம் என தெரிவித்ததுடன், தமிழகத்தில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வருகிறது. லஞ்சம் வாங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது மருத்துவத்தை சேவையாக செய்ய வேண்டும் மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரிவிக்க பட்டு வருகிறது. இதனை மீறும் பணியாளர்களை பணி நீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவம் பார்க்கும் திட்டம் குறித்த கேள்விக்கு , மருத்துவ காப்பீட்டு திட்டத்தை இன்னும் விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது அது விரைவில் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

 

 

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்