இறை நிலையும் ஜோதிடமும் !

இறை நிலையும் ஜோதிடமும் !

கடந்த வாரத்தில் ஒரு திரை படத்தில் ஒரு சிறந்த காட்சியை காண நேர்ந்தது , திரைப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்து இருந்தார் ,  ஒரு சிறப்பான காட்சி கடவுளை பற்றி எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைத்து இருந்தார் திரைப்படத்தின் இயக்குனர், அந்த காட்சி :

கதை படி கதாநாயகன் சாதாரண ஒரு ஓட்டுனர் என்றாலும் , அவரிடம் இறையருள் அதிகம் உண்டு என்பதை ஒரு சோதனையின் மூலம் கதாநாயகனே உணரும் அமைப்பில் அந்த காட்சி அமைந்திருந்தது .
கதாநாயகன் முதலில் எதிரில் வரும் ஒருவனிடம் ஒரு பத்து ரூபாய் கேட்கிறார் , அவர் கண்டபடி திட்டிவிட்டு நிற்காமல் சென்று விடுகிறார் , சிறிது நேரத்திற்கு பிறகு இரண்டாவதாக எதிரில் காரில் வருபவரை நிறுத்தி அவரிடம் ஒரு பத்து ரூபாய் கேட்கிறார், அவர் 100 ரூபாயை தந்து விட்டு என்னிடம் பத்து ரூபாய் இல்லை பரவாயில்லை 100 ரூபாயையும் நீயே வைத்து கொள் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார்.

அதற்க்கு பிறகு தன்னிடம் உள்ள இறைநிலையின் தன்மையை பற்றி பரிசோதிக்க சொன்ன, தன் நண்பனிடம் கதாநாயகன் கீழ் கண்டவாறு தனது அனுபவத்தை சொல்கிறார் !

நண்பா கடவுள் என்றால் என்ன என்று, இன்று நான் உணர்ந்து விட்டேன் , முதலில் எனக்காக பத்து ருபாய் கேட்டேன் பணம் கிடைக்க வில்லை திட்டு மட்டுமே கிடைத்தது , இரண்டாவதாக  பசியால் வாடி கொண்டிருந்த அந்த பெரியாவருக்கு சாப்பிட எதாவது வாங்கி தரலாம்  என்று பத்து ரூபாய் கேட்டேன் 100 ரூபாயாக கிடைத்தது , ஆக கடவுள் மற்றவருக்கு உதவும் மனப்பான்மையை பெற்றவருக்கு உடனடியாக ஒடி வந்து  உதவி செய்கிறார், கடவுள் வேறு எங்கும் இல்லை நம் உள்ளத்தில்தான் இருக்கிறார் என்பார்,  அது போல் ஜோதிடகலையும் தம்மை நாடி வருபவர்களின் வாழ்க்கையில் நன்மையையும் முன்னேற்றத்தையும் தரும் அமைப்பில், நமது ஆலோசனை இருக்க வேண்டும் அப்படி இருந்தால் இறைநிலை அவர்களுக்கும் நலம் தரும், நமக்கும் நன்மைகளை வாரி வழங்கும் இதுவே உண்மை .

ஜோதிடம் என்பது மக்களின் வாழ்க்கையில் எதிர் வரும் பல நிகழ்வுகளை, வருமுன் உணர்த்தும் ஒரு சிறப்பான கணித முறையாகும் , இந்த சிறப்பான ஜோதிட கலையை கற்றுக்கொள்ள ஒருவருக்கு என்ன என்ன தகுதிகள் வேண்டும் என்பதை பற்றி தற்பொழுது காண்போம் :

சரியான ஜோதிட கணிதம் கற்றுக்கொள்ள :

ஒருவருக்கு ஜோதிட கலையில் அதிக ஆர்வம், அதிக ஈடுபாடு மட்டும் இருந்தால் போதும் நிச்சயம் அவர்கள் இந்த ஜோதிட கலையை கற்றுக்கொள்ள இறைநிலை அருள் புரியும் , ( இது ஜோதிட கலைக்கு மட்டும் அல்ல ஆய கலைகள் 64 ம் பொருந்தும் ) மேலும் தேடுதல் இருப்பின்  ஜோதிட கலையை கற்று கொள்ள சிறந்த குரு கிடைக்க யோகமுண்டு.

 குரு முகமாக கற்றுகொள்ளும் கலை மட்டுமே வாழ்க்கையில் அனைத்திற்கும் நலம் தரும் .

ஜாதகருக்கு கருமையமும் , ஆக்கினையும் நன்றாக செயல்படுவது அவசியம் , இந்த அமைப்பு  தம்மை நாடி வருபவர்களுக்கு வாழ்க்கையில் நலம் பெற சரியான வழிகாட்டுதலை தரும், ஜோதிடருக்கு வாழ்க்கையில் சகல முன்னேற்றமும் தந்து புகழ் பெற செய்யும் .

தம்மை நாடி வருபவர்களை அவர்களின் நிலையில் இருந்து பார்க்கும் தன்மை ஜோதிடருக்கு வேண்டும் , அவர்களின் பிரச்சனைகளுக்கு சரியான ஜாதக ரீதியான ஆலோசனை வழங்கும் அதி நுட்ப அறிவாற்றல் நிச்சயம் வேண்டும் . இதற்கு துரியம் நன்றாக இயங்க வேண்டும் .

 தம்மை நாடி வருபவர்களிடையே  எவ்வித பாகுபாடு பார்க்காமல் தனது கடமையை சரியாக செய்ய வேண்டும், இது ஜோதிடரிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்பாகும் .

தம்மை நாடி வருபவர்கள் பலவித பிரச்சனைகள் ,  மனக்கவலை , மன போராட்டத்துடன் வருகின்றனர் அவர்களின் மனநிலையை நன்கு உணர்ந்து தன்னம்பிக்கை தரும் உளவியல் அறிவு ஜோதிடனுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான தனி தன்மையாகும், நமது ஆலோசனையில் ஜாதகர் தனக்குள் இருக்கும் திறமையை நன்கு உணர்ந்து சுயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெறவேண்டும் .

 ஏனெனில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனி திறமை உண்டு அதை ஜாதக ரீதியாக நாம் அறிந்து அவர்களுக்கு உணர்த்துவது அவசியம், கடமையும் கூட .

நமது வாக்கு பலிதம் பெரும் தன்மை உண்டு ( உண்மை ஜோதிடனுக்கு ) எனவே தவறிகூட மற்றவருக்கு தீமையான பலனை சொல்லிவிட கூடாது .

வாழ்க வளமுடன் 
Tiruchendur Astro Sridhar 
Contact & WhatsApp 
9360972178

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்