அய்யா வணக்கம்
எனது ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர்கள் அனைவரும் தங்களது ஜாதகத்தில் நாக தோஷம் , சர்ப்ப தோஷம் , ராகு கேது தோஷமும், ( லக்கினம் மற்றும் களத்திரம் ஸ்தானங்களில் ) , செவ்வாய் தோஷமும் ( 8 ல் செவ்வாய் அமர்வு ) இருப்பதால் தங்களுக்கு திருமணம் 32 வயதுக்கு பிறகு தான் நடக்கும் , எனவே இப்பொழுது திருமணத்தை பற்றி நினைத்து கூட பார்க்க வேண்டாம் என்று சொல்கின்றனர், இது வரை வந்த நல்ல வரன்களை எல்லாம் ( இரு வீட்டாருக்கும் பிடித்திருந்தும் கூட ) ஜோதிடர்கள் சொன்ன காரணத்திற்க்காக தட்டி கழித்து கொண்டு இருக்கின்றனர் எனது பெற்றோர்கள் , எனக்கும் வயது 24 ஆகி விட்டது ,உண்மையில் எனக்கு இளம் வயதில் திருமணம் ஆகாத ? எனது ஜாதக நிலையில் தாமத திருமணம் தான் நடக்குமா ? தயவு செய்து சரியான வழிகாட்டுங்கள் , வேலை பார்க்கும் இடத்தில் தனியாக இருக்க மிகவும் சிரமமாக இருக்கிறது குறிப்பாக வீட்டு சாப்பாடு சாப்பிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது , நீங்கள் சொல்லும் பதிலில்தான் எனது திருமண வாழ்க்கை அமைவதாக இருக்கிறது .
அன்பு நண்பருக்கு !
வணக்கம் , தங்களின் ஜாதக அமைப்பில் லக்கினம் கடகமாகவும் , கடகத்தில் அமர்ந்த கேது, மகரத்தில் அமர்ந்த ராகு என தான் அமர்ந்த பாவக முறையே லக்கினம் மற்றும் களத்திர பாவகங்களை 100 சதவிகிதம் நன்மையான பலன்களை தரும் அமைப்பில் சிறப்பாக அமர்ந்து இருக்கின்றனர் , மேலும் கும்பத்தில் ( 7ம் பாவகத்தில் ) அமர்ந்த செவ்வாய் லக்கினம் மற்றும் ஐந்தாம் பாவகம், ஜீவன ஸ்தானம் என்ற அமைப்பிலும் நல்ல பலன்களையே தந்துகொண்டு இருக்கின்றார் .
எனவே தாங்கள் இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதில் எவ்வித தடையும் இல்லை , அப்படி இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதால் தங்களுக்கு எவ்வித துன்பமும் வர வாய்ப்பு சிறிதும் இல்லை என்பதே உண்மை , எனவே உடனடியாக தங்கள் திருமணம் செய்துகொள்வதற்கு உண்டான வேலைகளை கவனியுங்கள் , பெண் ஜாதக ரீதியாக ஏதாவது சந்தேகம் மற்றும் குழப்பம் இருந்தால் மட்டுமே எம்மை தொடர்பு கொள்ளுங்கள் , சரியான ஜோதிட விளக்கங்களை நாங்கள் தருகிறோம் .
மேலும் நாக தோஷம் , சர்ப்ப தோஷம் , செவ்வாய் தோஷம் என்பது எல்லாம் ஒரு மாய தோற்றம் , ஜோதிடத்தை பற்றிய போதிய அறிவு அற்றவர்களும் , அரை குறை ஜோதிடர்களும் பரிகாரம் என்ற பெயரில் பொருள் ஈட்ட சொல்லும் ஒரு வார்த்தையே அன்றி உண்மை இல்லை என்பதை தங்களுக்கு உணர்த்த நான் கடமை பட்டுள்ளேன் .
பொதுவாக ஜோதிடர்கள் நவ கிரக தத்துவங்களை , வாய் வலி செய்திகளாலும் , தனது கற்பனையில் உதிக்கும் எண்ணங்களையும் ஜோதிடம் பார்க்க வரும் அன்பர்கள் மீது திணிப்பது கலி காலத்தின் கொடுமையே , இதனால் சரியான வயதில் திருமணம் மற்றும் சுப காரியங்கள் நடை பெறாமல் , இளம் பெண்களும், ஆண்களும் பலவாறு சிரம படுவதை பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன் .
திருமணம் என்பது என்ன ? என்பதை பற்றிய புரிதல் மக்களுக்கு இந்த இடத்தில் அதிகம் தேவை படுகிறது , சரியான வயதில் திருமணம் செய்யும் பொழுது ( பருவத்தே பயிர் செய்தால் எப்படி பயிர் செழித்து வளர்கிறதோ அதுபோல் ) தம்பதியின் ஒற்றுமை சிறப்பாக விளங்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மையை கொடுக்கும் , குறிப்பாக நல்ல சந்ததிகள் அமையும் , அவர்களை சிறப்பாக வளர்க்கும் ஆற்றலும் , வயதும் நம்மிடம் இருக்கும் , அவர்களை நமது கட்டுப்பாட்டில் சிறப்பாக வளர்க்க முடியும் , நமது சொல்லிற்கு கட்டுப்பட்டு நடக்கும் மன நிலை அவர்களுக்கு இருக்கும் .
மேலும் நமது உடல் மனம் இரண்டும் சிறப்பாக செயல் புரியும் இது இயற்க்கை நமக்கு கொடுத்த வரம் , இங்கே இது முரண் படும் பொழுது தான் வாழ்க்கையில் அதிக சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் , காலம் கடந்து திருமணம் செய்யும் பொழுது வாழ்க்கையில் வழி தவறி செல்ல நிறைய சந்தர்ப்பங்களை நவ கிரகங்கள் தர வாய்ப்பு உண்டு , இதனால் அதிக இன்னல்களை சந்திப்பது, திருமணம் ஆகாமல் தவிக்கும் ஆண்களும் பெண்களுமே , மேலும் தாமத திருமணத்தால் குழந்தை பிறப்பு முதல் அனைத்தும் தாமத பட வாய்ப்பு உண்டு , அதிகம் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறப்பு ஏற்ப்படுவதற்க்கு இதுவும் ஒரு காரணம் .
மேலும் இயற்க்கைக்கு மாறாக அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளின் நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் , அறிவாற்றல் ஆகியவை கடுமையாக பாதிக்க படுகிறது என்பது ஆராய்ச்சி முடிவு , நம்மால் ஒரு சிறந்த சந்ததியை தர முடியவில்லை எனில் இந்த வாழ்க்கை வாழ்ந்து என பயன் , இதற்க்கு எல்லாம் அடிப்படை காரணம் என்ன ? சரியான வயதில் திருமணம் ஆகததே காரணம் .
பொதுவாக 100 ஜாதகம் வரும் பொழுது அதில் 8 ஜாதகம் மட்டுமே திருமண தாமதத்தை தரும் அமைப்பில் இருக்கும் , மேலும் இரண்டு ஜாதக அமைப்பிற்கு திருமணத்திற்கு உண்டான வாய்ப்பே இல்லாமல் இருக்கும் , ஆனால் தற்பொழுது நடப்பது என்ன ? ஜோதிடர்கள் பலர் வரும் ஜாதகம் அனைத்திலும் ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லி ( சனி ஏழில் , ராகு கேது தோஷம் , செவ்வாய் தோஷம் ) இயற்கையாக அமையவிருக்கும் திருமணத்தையும் தடுத்து விடுகின்றனர் , இதையே வேதவாக்காக எடுத்து கொண்டு பலர் தமக்கு சிறப்பாக அமைய இருக்கும் நல்ல வாழ்க்கையை கெடுத்து கொள்கின்றனர் .
ஒருவருக்கு களத்திர பாவகம் மற்றும் குடும்ப பாவக அமைப்பில் இருந்து இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்று விதி இருந்தால் , அவர் எவ்வளவு காலம் கடந்து திருமணம் செய்தாலும் அதை அனுபவித்தே தீர வேண்டும் இதை தடுக்க எந்த ஜோதிடனாலும் முடியாது , ஏன் கடவுளாலும் முடியாது , அப்படி நடக்கும் தீமையான பலன்கள் இளம் வயதில் நடந்தால் ஜாதகர் அதை சமாளிக்கும் ஆற்றலாவது அதிகம் இருக்கும் , அல்லது ஏற்றுக்கொண்டு வாழும் திறனாவது இருக்கும் நல்ல அனுபவம் கிடைக்கும் , காலம் கடந்து திருமணம் செய்து இந்த நிலை ஏற்ப்பட்டால் வயதும் அதை ஏற்று கொல்லாகொள்ளது மனதும் அதை ஏற்று கொள்ளது எனும் பொழுது அங்கு பிரிவே பிரதானமாக இருக்கும் , குழந்தைகள் இருந்தாலும் அதை பற்றிய கவலை இருக்காது தனது சுதந்திரம் மற்றும் பெரிதாக நினைக்க துண்டும் .
32 வயது எனும் பொழுது வாழ்க்கையில் பாதி நாள் சென்றுவிடும் இதன் பிறகு திருமணம் செய்து வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்து கொள்வது என்பது மிக கடினம் , எனவே தங்களது வாழ்க்கையை சரியான வயதில் தாங்களே தேர்ந்தெடுங்கள் .
பொதுவாக ஆண்களுக்கு 24 முதல் 27 வயதிற்கு உட்ப்பட்ட காலகட்டத்தில் திருமணம் செய்வது சிறப்பு , இதற்க்கு மேல் சென்றால் திருமண வாழ்க்கை அமைய அதிக சிக்கலை தரும் .
பெண்களுக்கு 21 வயது முதல் 24 வயதிற்குள் திருமணம் செய்வது சிறப்பு , இதற்க்கு மேல் சென்றால் திருமண வாழ்க்கை அமைய அதிக சிக்கலை தரும் .
ஆணுக்கு 29 வயதிற்கு மேலும் , பெண்ணிற்கு 27 வயதிற்கு மேலும் திருமணம் நடக்க வில்லை எனில் , சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் அல்லது களத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கும் ,
ஆணுக்கு 35 வயதிற்கு மேலும் , பெண்ணிற்கு 33 வயதிற்கு மேலும் திருமணம் நடக்க வில்லை எனில் , அவர்களது சுய ஜாதகத்தில் குடும்பம் , மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களும் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கும் .
ஜோதிடம் தங்களுடைய வாழ்க்கையில் வரும் இன்னல்களை தீர்பதற்கு வழிகாட்ட வேண்டுமே அன்றி , இன்னல்களை தருவதாக இருக்க கூடாது .
வாழ்க வளமுடன்
Tiruchendur Astro Sridhar
Contact & WhatsApp
9360972178