ஜாதி மத பேதம் இன்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்

ஜாதி மத பேதம் இன்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். சிவசேனா மாநில செயலாளர் மா.முருகன்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோளகாலமாக நடைபெற்று வருகிறது . இந்து அமைப்புகள் பல விதமான விநாயகர் சிலைகளை வடிவமைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் சிவசேனா அமைப்பின் மாநில செயலாளர் மா முருகன் தலைமையில் சுமார் 11 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை அமைக்கப்பெற்று கணபதி ஹோமம் முதல் அனைத்து பூஜைகளும் நடைபெற்றது இது குறித்து அவர் கூறுகையில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி விழா சிவசேனா சார்பாக இயல் இசை நாடகம் பட்டிமன்றம் குழந்தைகளுக்கான பல போட்டிகள் நடைபெற உள்ளன பொதுமக்கள் அனைவரும் வந்து விநாயகரின் அருள் பெற்று வாழ்வில் இன்பம் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார் மேலும் ஜாதி மத பேதம் இன்றி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றார்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்