திருவண்ணாமலை  

துர்க்கை அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி அருணாச்சலேஸ்வரர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி....

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேசுவரர் கோயிலின் நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை
முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் எழுந்தருளி அருணாசலேஸ்வரர் கோவிலின் நான்கு மாட விதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார், கார்த்திகை தீப திருவிழா வான வேடிக்கையுடன் கோலாகலமாக தொடங்கியது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை வழிபட்டனர்.

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்திதரும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய அருணாசலேசுவரர் கோயிலில் கார்த்திகை தீபத்
திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த
ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன்
தொடங்குகிறது, அதனை தொடர்ந்து காலையிலும் இரவிலும் 10
நாட்கள் பஞ்சமூர்த்திகள் கோயிலின் நான்கு மாட விதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

அருணச்சலேஸ்வரர் கோவிலில் வருகிற 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்கி 24 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இதற்கு முன்னதாக இன்று திருவண்ணாமலை மாநகரின் சின்னகடை வீதியில் அமைந்துள்ள துர்க்கையம்மன் கோவிலில் நகர காவல் தெய்வமான
துர்க்கையம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் தீப ஆரதனை நடைபெற்றது, அதனை தொடர்ந்து துர்க்கையம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காமதேனு வாகனத்தில் எழுந்தருளி
அருணாசலேஸ்வரர் கோயிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்