திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்மன்
உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு 2 லட்சம் மதிப்பிலான 6 திருக்குடைகள் காணிக்கை...
கைலாய வாத்தியங்கள், நகரி வாத்தியங்கள் முழங்க, செண்டை
மேளத்துடன் திருக்குடைகள் கோவிலின் நான்கு மாட வீதியுலா...
திருவண்ணாமலை-13.11.2026
பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்கி தரும் திருத்தலமாக விளங்கும்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோரும் திருக்கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 15 ஆம் தேதி காலை தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி 24 ஆம் தேதி அதிகாலையில் கோயிலின் கருவறையின் முன்பாக 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் போது காலையில் விநாயகர் சந்திரசேகரர் மற்றும் இரவு விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் கோவிலின் 4 மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
இதில் சுவாமிகளுக்கு மேல் கட்டப்படும் திருக்குடைகளை கடந்த 3 ஆண்டுகளாக சென்னை பெரம்பூரை தலைமை இடமாகக் கொண்ட திருவண்ணாமலை திருக்குடைகள் சமர்ப்பண டிரஸ்ட் சார்பில் அண்ணாமலையார் கோயிலுக்கு காணிக்கையாக அளிப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் 6 திருக்குடைகளை திருவண்ணாமலை திருக்குடைகள் சமர்ப்பண டிரஸ்ட் சார்பில் வழங்கினர்.
இந்த நிலையில் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அருகே திருக்குடைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று பின்னர் கைலாய வாத்தியங்கள் விண்ணைப் பிளக்க நகரி வாத்தியங்கள் முழங்க செண்டை மேளத்துடன் பெண்கள் கோலாட்டம் ஆடிய படி
திருக்கோயிலின் 4 மாடவீதிகளில் வலம் வந்து பின்னர் திருக்குடைகளை கோயிலில் ஒப்படைத்தனர்.