ஆசிரியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கும் விழா

எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்கள்; சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர். வே.சம்பத்குமார் பங்கேற்பு

மதுரை நவ:13,
 கள்ளர் சீரமைப்புப்பள்ளிகளின் கட்டடங்களைப்பாதுகாக்கவும், மாணவர்களுக்கு ஏற்ற கற்றல் சூழலை உருவாக்கவும், 2026-2027 ஆம் கல்வியாண்டில் ரூபாய் 5-கோடி செலவில் 53 பள்ளிகளில் சிறப்பு பழுது மற்றும் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே.அமைச்சர் சம்பத்குமார்  தெரிவித்தார்.

மதுரையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 2025-2026 ஆம் கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வுகளில் அதிக சதவீதங்களில் தேர்ச்சி பெறச்செய்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர்  கலைஅரசி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் சம்பத்குமார்  ஆகியோர் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினர்.

வுிழாவில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்,  நமது அரசு கல்வியின் தரத்தை உயர்த்துவதோடு, பள்ளிகளின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளையும மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார்.

அந்த வகையில், 2026-2027 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகளின் அடிப்படையில், தற்போது முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்ற அவர், 

ரூபாய் 4.50 கோடி செலவில் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 19 கூடுதல் வகுப்பறைகள், 12 கூடுதல் கழிப்பறைகள், அறிவியல் ஆய்வகம் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன என்றும் இதன் மூலம ;மாணவர்கள ;பாதுகாப்பான, வசதியான சூழலில் கல்வி கற்கும் வாய்ப்பு மேம்படும் என்றும் அவர் கூறினார்.

அதே போன்று ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் பணிச்சூழலையும் மேம்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்திவருகிறது என்றும் ஆசிரியர்களின் நலனைக்கருத்தில் கொண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சம்பத்குமார்  தெரிவித்தார்.
 தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்றஉறுப்பினரகள் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி, சோ.கார்த்திகேயன், எம்.வி.கருப்பையா, எம்.எம்.கோபிசன் மற்றும் ம.விஜய் மற்றும் அவர்கள், மாநகராட்சி பொறுப்பு மேயர் நாகராஜன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ஜெயப்பிரித்தா உள்ிட்ட பலர் கலந்து கொண்டனர்

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்