மதுரையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

மதுரையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி


முன்னாள் பாரத பிரதமர், பண்டிதர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 மதுரை  தல்லாகுளம் தமுக்கம் மைதானம் அருகில் உள்ள பண்டிதர் ஜவஹர்லால் நேரு சிலைக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து  உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது,

முந்தைய திமுக ஆட்சியின் ஊழல்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது.

 'அண்டாக்காகசம் அபுக்கா குகூம்', என்பது போல் ஊழல் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே உள்ளன.

 அள்ள அள்ள குறையாத அமுத சுரபி போல் முந்தைய திமுக ஆட்சியின் ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளன.

 முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டுள்ளனர். 

தமிழக முதல்வர் விஜய் இரும்புக்கரம் கொண்டு ஊழலை ஒடுக்க மிக கவனமான முடிவுகளை எடுத்து வருகிறார் என்றார்.

மேலும் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் அதிகாரம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை.

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் உள்ளன.

 அந்த வழக்குகள் வெகு விரைவில் தீர்க்கப்படும் என ஆளுநர் எங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 தமிழக முதல்வரும் தங்களது ஆலோசனையை தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்து ஆளுநரை சந்திக்கும் ஒரே அமைச்சர் நான் தான்.

 ஆளுநர் உடனான சந்திப்பு என்பது சம்பிரதாயம் கிடையாது, இது உயர்கல்வித்துறையில் ஒரு நடைமுறை.

 எனவே நான் தொடர்ந்து ஆளுநரை சந்திப்பேன். அவரது ஆலோசனைகளை நிச்சயமாக பெறுவேன்.

 அதன் அடிப்படையில்  முதலமைச்சர் விஜய் வழி காட்டுவார் என்றார். 

இந்த நிகழ்ச்சியில் 

 மதுரை மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் நல்லமணி 

 மதுரை வடக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நூர்முகமது , 

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ராஜ் பிரதாப் , 


காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்