இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்! 🔥

 

*இந்துக்களின் ஒற்றுமையை நிலைநிறுத்த  ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்க வேண்டும் என சிவபக்த சேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை தலைவர் சிவக்குமார் என்ற ருத்ரபாபு செய்தியாளர்கள் சந்திப்பில்  வேண்டுகோள் விடுத்தார்

திண்டுக்கல்லில் உள்ள  அருள்மிகு செல்வவிக்னேஷ்வரர் திருக்கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,


 எங்களது அறக்கட்டளை மூலமாக நாடு முழுவதும் இந்துக்களின் மயானத்தை புனித இடமாக மாற்ற வேண்டும் என்பதற்காக காம்பவுண்ட் சுவர் கட்டித் தந்து வருகிறோம்.

 சைவத்தையும் தமிழையும் வளர்ப்பவர்களான இந்து கோவில் மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்ளிட்டோரை தெய்வங்களாக பார்க்கின்றோம்.

 ஆனால், தற்பொழுது ஆதீனங்களின் பாதை மாறி செல்கின்றன. மாயவரம் கந்த சஷ்டி விழாவில் இரண்டு ஆதீனங்கள் மோதிக்கொண்டது மிகுந்த வேதனை அளிக்கின்றது என்றும்,

 அவர்களுக்குள் உள்ள பிரச்சனைகளை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக வீதிக்கு வந்து சண்டையிடுவது போன்ற  செயல் வேதனையளிக்கிறது என்றார்.

 ஆதீனங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை தீர்க்கவும், இந்துக்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தவும், தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதற்காக  இந்து ஒழுங்கு கமிட்டி குழு அமைக்க வேண்டும். இதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்களையும் சிவ பக்த சேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை சார்பாக  சந்திக்க உள்ளேன் என தெரிவித்தார்.

 பேட்டியின் போது அறக்கட்டளை உறுப்பினர்கள் நமச்சிவாயம், ராஜேஷ், கார்த்தி, மதி தேவராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்