ஆறு மாவட்ட கல்லுாரி முதல்வர்கள் மாணவர்கள் பங்கேற்பு
மதுரை அக்:27, மதுரையில் உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆறு மாவட்ட கல்லூரி முதல்வர்களுடன் ஆய்வுக் கூட்டம்
மற்றும் மாணவர்கள் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில்
மதுரை, திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட
ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் மாணவர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவை இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புக்களை மேம்படுத்துதல், பாடத்திட்டங்களின் தரம் மற்றும் கல்லூரிகளின் கல்விசார் செயல்பாடுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, தமிழ்நாடு அரசால் மாணவர்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்கள் மாணவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வது குறித்து மாணவர்களுடன் விழிப்புணர்வு கலந்தாலோசனையும் நடத்தப்பட்டது.
மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் உயர்கல்வி மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட அரசின் முக்கியத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.
மேலும், கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட மாணவர் நலன் சார்ந்த நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துதல், மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கல்லூரிகளில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்குதல் ஆகியவை தொடர்பாகவும் மாணவர்கள் கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர்,
இக்கூட்டங்களின் வாயிலாக உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதுல் , மாணவர் சேர்க்கையை அதிகரித்தல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு இது போன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது என்றார்.
மேலும்,அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்துதல், மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் ஆகியவற்றிற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் இக்கூட்டத்தில் வாயிலாக பெறுவதற்காக இத்தகைய கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கூட்டத்தில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், உயர்கல்வித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநர் ரத்தினசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா,உள்ளிட்ட அதிகாரிகள்,
சட்டமன்ற உறுப்பினர்கள் கல்லாணை, கார்த்திகேயன், எம்.வி. கருப்பையா மற்றும் ம.விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.