NTC தொழிலாளர்கள் வீடு திரும்ப போராட்டம் 


-----------------------------------------
 NTC-JAC ல் அங்கம் வகித்துவரும் HMS, CITU,INTUC, ATP, AITUC, DTMS, DR, AMBEDKAR, NDLF ஆகிய தொழிற்சங்க இயக்கங்களின் சார்பில் இன்று தேசிய பஞ்சாலை கழகம் தென் மண்டல அலுவலகம் (SRO) கோவை முன்பு  NTC அனைத்து தொழிலாளர்களும் வீடு திரும்பா போராட்டத்தை, ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 போராட்டத்திற்கு உரிய காரணம் 2020 மே 18ஆம் தேதி முதல் சட்ட விரோதமாக ஆலையை இயக்காமல் முடக்கி இருக்கிறார்கள். அதில் தமிழகத்தில் ஏழு ஆலைகள் முடக்கப்பட்டு இருக்கின்றது.

 தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சி, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு ஆகியவைகள் மூலம் நிர்பந்தம் ஏற்படுத்தி முழு சம்பளத்தை சட்டப்படி கொடுத்தாக வேண்டும் என ஒப்புதலை பெற்றோம்.

 அதன்படி 2023 ஜூன் மாதம் வரை தொழிலாளிகளுக்கு முழு சம்பளத்தை கொடுத்தார்கள். அதற்கு பின்னாலே பாதி சம்பளம் கொடுத்து வந்தார்கள். இந்த 12 மாதங்கள் ஓராண்டு காலம் அன்றாட வேலைக்கு வர கூடிய பவர் ஹவுஸ், வாட்ச் அண்ட் வார்டு தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு எந்தவித  சம்பளமும் வழங்கப்படவில்லை. 2025 ஜனவரி முதல் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கிராஜுட்டி வழங்கப்படவில்லை.

 அதேபோல 6 ஆண்டு காலம் குறைந்தபட்ச சட்டப் படியான போனஸ் 8.33 வழங்கப்படவில்லை.
பலமுறை தொழிற்சங்கங்கள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு டெல்லி சென்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர், ஜவுளித்துறை செயலாளர் NTC-CMD ஆகியோரை சந்தித்து வலியுறுத்தியும் எந்தவித பதிலும் வரவில்லை. சட்டத்தை காப்பாற்றுகிற மத்திய அரசு, இங்கே சட்டத்தை காற்றில் பறக்க விட்டுவிட்டு அநியாயத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

 எனவேதான் இந்த அநியாயத்தை கண்டித்தும், நிலுவைச் சம்பளம், நிலுவை போனசை வழங்க கோரியும் முடிவு ஏற்படுகிற வரை  NTC தென் மண்டல அலுவலகம் முன்பாக தொடர் போராட்டம் நடத்துவது என நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப் போராட்டத்தில் கேரள மாநிலத்தில் இருந்தும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்று இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
என,
HMS, CITU, INTUC, ATP, AITUC, DTMS, Dr,AMBEDKAR, NDLF.
அனைத்து தொழிற்சங்க களுக்காக 
T.S.இராஜாமணி -HMS.மேற்படி போராட்டத்தில் T.S. இராஜாமணி,G. மனோகரன்- HMS, C.பத்மநாபன், C.பிரான்சிஸ் சேவியர்-CITU,
 V.R.பாலசுந்தரம், A.G.ஆறுச்சாமி-INTUC,
M.ஆறுமுகம், K.பொன்ராஜ்-AITUC,
எம். கோபால், ஆர். தேவராஜ்-ATPமு. தியாகராஜன்-.V.சண்முகம்-DTMS,
S.உதயகுமார், M.நீலமேகம்-Dr,Ambedkar, P.ரங்கசாமி,P. ஜெகநாதன்-NDLF ஆகிய தலைவர்களும், கேரள மாநில சிஐடி சங்க தலைவர்கள் ராஜன் ராதாகிருஷ்ணன்-CITU, ஜாய்சி ஜோஸ், ராஜேஷ்வரி-INTUC வழிகாட்டுதலில் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்