காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம்.

கோவை மாநகர மாவட்ட கட்சி அலுவலமான காமராஜ் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி, தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய பாஜக அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்தியா முழுவதும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தேர்தல் ஆணையம் நடத்தியுள்ள முறைகேடான மற்றும் நயவஞ்சகமான செயல்களைக் கண்டித்து கடுமையான போராட்டங்களை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324-ன் கீழ், வாக்காளர்களைப் பதிவு செய்வது, நீக்குவது, தேர்தலை நடத்துவது மற்றும் முடிவுகளை அறிவிப்பது எனத் தேர்தல் ஆணையத்திற்குப் பல்வேறு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார். ஆனால், இந்த அதிகாரங்கள் இருந்தபோதிலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இதர ஆணையர்கள் சட்டத்திற்குப் புறம்பான பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, தேர்தல் ஆணையத்தில் மூன்று ஆணையர்கள் உள்ள நிலையில், பெரும்பான்மை முடிவுகளின் அடிப்படையில் அல்லது அனைவரும் சேர்ந்து எடுக்கப்படும் முடிவுகளே தேர்தல் ஆணையத்தின் முடிவாக இருக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட முறையில் சிறப்பு உரிமைகள் எதுவும் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கர்நாடக எம்எல்ஏ பிரியா ராஜன். கார்த்திக் தங்கவேல் மாநில பொதுச்செயலாளர். மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபாலன். மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஆரிப் கான். கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் விஜயகுமார். வடக்கு மாவட்ட தலைவர் ரங்கராஜ். தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பகவதி வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வி எம் சி மனோகரன். கணபதி சிவக்குமார். நீலகிரி மாவட்ட தலைவர் நாகராஜன். பொருளாளர் சௌந்தர குமார். விஜயகுமார்.கவுன்சிலர் காயத்ரி. சுடர்விழி.மற்றும் மாவட்ட நிர்வாகிகள் டிவிசன் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்