*கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம், காவிரி நீர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் விமர்சனம் தெரிவித்தார்.*
அதிமுகவில் உள்ள
2 கோடி உறுப்பினர்களில் ஒருவர்தான் வேலுமணி அவர் சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்க முடியாது எனவும் இந்த அரசு தானாக கவிழ்ந்து விடும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் .
தொழில்கள் ஆந்திராவுக்குச் செல்லும் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், தொழில்களை ஈர்க்கும் திறன் தமிழக அரசுக்கு இல்லை என்றும், அரசு கையாலாகாத அரசாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். மற்றவர்கள் மீது பழி சுமத்துவதையே அரசு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பே இறுதியானது என்றும், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுமிகள் காணாமல் போகும் சம்பவங்கள், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். பல எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியும் முதல்வர் பதிலளிக்கவில்லை என்றும் விமர்சித்தார்.
தமிழகத்தில் ₹700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகியிடம் மெத்தம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட போதைப்பொருட்கள் தற்போது தமிழகத்திலேயே தயாரிக்கப்படுவதாகக் கூறிய அவர், போதைப்பொருள் விவகாரத்தில் அரசு தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றார்.
டிஜிபி அறிக்கை வெளியிட்ட மறுநாளே மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஹெராயின் பறிமுதல் செய்வதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தமிழக காவல்துறை மற்றும் உளவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார். போதைப்பொருள் பயன்பாட்டால் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கே ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சுட்டிக்காட்டிய அவர், சாதாரண மக்களின் பாதுகாப்பு எப்படி இருக்கும் எனக் கேள்வி எழுப்பினார். அமைச்சர்களின் காவல் நிலைய ஆய்வுகள் மற்றும் நள்ளிரவில் காவல் கண்காணிப்பாளரிடம் கோப்புகளை வரவழைப்பது போன்ற செயல்பாடுகளையும் விமர்சித்தார்.
காவிரி நீர் விவகாரத்தில், சம்பா சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளதாகவும், 45 நாட்களுக்கான தண்ணீரை வைத்துக்கொண்டு விவசாயம் செய்ய முடியாது என்றும் கூறினார். ஜனவரி மூன்றாவது வாரம் வரை தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில், கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பதாகவும், தமிழகத்திற்கான பங்கு நீரைப் பெற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். டெல்லியில் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர், கர்நாடக முதல்வரிடம் காவிரி நீர் குறித்து பேசியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
*தவெக ஆட்சி கவிழ்ப்பு குறித்த கேள்விக்கு*, “எங்களிடம் 41 எம்.எல்.ஏ.க்கள் தான் இருக்கின்றனர். இதை வைத்து ஆட்சியை எப்படி கவிழ்க்க முடியும்? இப்படியே இருந்தால் தவெக ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும். யாரும் கவிழ்க்கத் தேவையில்லை” என்றார்.
செங்கோட்டையன் – வேலுமணி சந்திப்பு குறித்த கேள்விக்கு, “நீங்களே தீர்மானம் பண்ணிக்குங்க” என பதிலளித்தார். சசிகலா தனிக்கட்சி தொடங்கியுள்ள நிலையில், வெளியே சென்று தனிக்கட்சி ஆரம்பித்தவர்களை அதிமுகவில் எப்படி இணைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், “இரண்டு கோடி பேரில் ஒருவர் வேலுமணி. அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு கேட்கக்கூடாது” என்றும் தெரிவித்தார்.
கரூர் சம்பவம் தொடர்பாக, கொளத்தூரில் முதல்வர் இறுதிச்சடங்கில் பங்கேற்றதைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, கரூருக்கு நேரடியாகச் சென்று ஆறுதல் தெரிவித்திருக்க வேண்டும் எனவும் கூறி