தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை. 

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தூய்மைப் பணியாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஏஐடியூசி தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் இன்று 20 11 2026 மாலை 5.00  மணிக்கு கோவை குனியமுத்தூரில் உள்ள இடையர்பாளையம் பிரிவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தூய்மை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு ஏஐடியூசி யின் மாநில செயலாளர் என்.செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கோயமுத்தூர் லேபர் யூனியன் சங்க பொதுச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன் தமிழ்நாடு ஏ ஐ டி யூ சி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோட்டை ஆர்.நாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ 42,000/- என நிர்ணயம் செய்ய வேண்டும். 

தமிழ்நாடு அரசின் நீதித்துறை அரசாணை 225 இன் படி அவுட்சோர் சிங் OMCL முறையை ரத்து செய்ய வேண்டும். 

குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண் 62 ன் படி மாவட்ட ஆட்சித் தலைவர், குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித்துறை இந்த மூவர் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கூலியில் எது அதிகமா அதை அந்த மாவட்டத்தில் தொழிலாளர்களின் சம்பளமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை ஏ ஐ டி யு சி சங்கம் வரவேற்கிறது. 

ஒப்பந்த முறையிலான தொழிலாளர்களை நியமிக்கும் முறையை ஒழித்து விட்டு சுய உதவி குழுக்கள் போன்ற குழுக்கள் அமைத்து, அதன் மூலம் சுகாதாரப் பணியாளர்கள் வேலைக்கு நியமிக்கப்படுவார்கள். 

அவர்களது பணி சேவை பணியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற அரசாணையை ஏஐடியூசி சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. 

இது நடைமுறைப் படுத்தப்பட்டால் இனி மேற்கொண்டு பணி நிரந்தரம் என்பது இல்லை என்பதை இந்த அரசாணை வெளிப்படையாக சொல்கிறது. 

எனவே, இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினார்கள். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி ஓட்டுநர்கள் சங்க தலைவர் முருகன், முருகேசன், செயலாளர் அஜித் குமார் மண்டல பொறுப்பாளர்கள் துளசிமணி,  பிரேமா, முனியம்மாள், சாமுவேல், கிழக்கு மண்டல பொறுப்பாளர் மருதாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்