கரூர்
கடந்த ஆட்சியில் மதுபானங்களுக்கு பத்து ரூபாய் பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர் ஆனால் தற்பொழுது தவெக ஆட்சியில் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை பத்து ரூபாய் என பாடியவர்கள் தற்பொழுது என்ன பாட்டு பாட போகிறார்கள் என செந்தில் பாலாஜி பேட்டி
கரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் மிசா கைது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை அவதூறாக பேசியதை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜயை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவமதிக்கும் வகையிலும் மிசா குறித்து பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் மிசா குறித்து முதலமைச்சர் பேசும் போது உடல் மொழியை வெளிகாட்டியதும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. மிசா காலத்தில் மு க ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டார் என சட்டத்துறை அமைச்சர் பேசியதும் கண்டனத்திற்கு உரியதாக மாறியது. முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து சட்டமன்றத்தில் அவதூறாக பேசிய தமிழ்நாடு முதலமைச்சரை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் வி செந்தில் பாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சரை அவதூறாக பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை கண்டித்து கோசங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது
தவெக அரசு அமைந்து 116 நாட்களில் தமிழ்நாட்டில் 550 மேற்பட்ட குற்ற சம்பவங்கள் 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் 200க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கும் குற்றங்களை சம்பவங்களைப் பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டு உரையாற்றினார்
காவல்துறை மானிய கோரிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வைக்கும் குற்றச்சாட்டுகளை முதல்வர் அதற்கு பதில் அளிக்க வேண்டும்
ஆனால் எழுந்த முதல்வர் பதில் அளிப்பார் என்று நினைக்கும் பொழுது வரும் திங்கட்கிழமை பதில் அளிக்கிறேன் எனவும் எதிர்க்கட்சிகள் ஓட வேண்டாம் என்று கூறி முதல்வர் எழுந்து ஓடிவிட்டார்
மின்சார வாரியம் சிறப்பாக செயல்படு வேண்டும் என்றால் அந்தத் துறையின் உடைய அமைச்சர் செயல்பட்டால் மட்டுமே பணிகளை அதிகாரிகளிடம் கூறி சீரான மினியோகத்தை தர முடியும்
தவெக அரசு முழுமையான ஆய்வு கூட்டங்களை நடத்தவில்லை 2021 ஆட்சிப் பொறுப்பேற்றும்போது மண்டலங்கள் வாரியாக சென்று அதிகாரிகளிடம் மின்வாரயத்தில் உள்ள குறைகளை கேட்டு தீர்வு கொண்டு ஆனால் இந்த அரசு உரையான மின்சாரம் வழங்குவதற்கான எந்த ஒரு செயல்பாடும் இல்லை போதிய உதிரி பாகங்கள் கிடையாது மீட்டர் இருப்பு இல்லை களத்திற்கு சென்று பணியாளர்களை நேரில் வேலை வாங்குவதில்லை என்ன செய்வது என்று கூட தெரியாமல்மின்வாரிய அதிகாரிகள் புலம்பி கொண்டு இருக்கின்றனர் தொலைக்காட்சிகளில் தினம்தோறும் மின்தடை காரணமாக மக்கள் போராட்டம் செய்தியே வெளியாகி வருகிறது
கடந்த ஆட்சியில் மதுபானங்களுக்கு பத்து ரூபாய் பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர் ஆனால் தற்பொழுது 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்து வருகின்றனர் அந்த துறையினுடைய அமைச்சரே பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்ட பொழுது மதுபானங்கள் கூடுதலாக பணம் வசூலிக்கிறார்கள் என பேட்டியளித்தார்
கடந்த ஆட்சியில் மதுபானம் 26 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டது பதினாறு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது கொள்கை விளக்க கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வழக்குகள் தவெக அரசு அமைந்த உடன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
கரூரில் பத்து ரூபாய் என பாடினீர்கள் தற்பொழுது என்ன பாட்டு பாட போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்
இந்த தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் தொடருமே ஆனால் 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விடும் என்று குற்றச்சாட்டு தெரிவித்தார்.