சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த நிலையத்தில்மதிமுக பொதுசெயலாளர் வைகோ -வுக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்த வைகோ,
1973ம் முதல் பசும்பொன் தேவர் திருமகனாரின் குருபூஜையில் தவறாமல் சென்று கொண்டிருக்கிறேன் என்றும்
நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்ததால் செல்ல முடியவில்லை என்றும் தற்போது 50-வது ஆண்டு குரு பூஜையில் கலந்து கொள்கிறேன் என்றார்.
நாட்டின் விடுதலைக்காக சிறையில் இருந்தவர் தேவர் திருமகனார் என்றும், சிறையில் பிரம்மச்சரியத்தை ஒழுக்கத்தை கடைபிடித்தவர் என்றும் ஆங்கிலத்தில் அவருக்கு நிகரான சொற்பொழிவாளர்களை கண்டதில்லை என்றும் புகழாரம் சூட்டிய அவர்
அனைத்து சமூக மக்களுக்கும் இணைந்த தலைவராக தான் தேவர் திருமகனார் இருந்துள்ளார் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வைகோ,
தேனியில் சிறைச்சாலையில் கையில் கிடைத்த ஆயுதங்களை கொண்டு காவலர்களை தாக்கி 17 பேர் தப்பிச் சென்ற
செய்தியை பத்திரிகைகளில் பார்த்தேன் என்றும் இதற்கிடையில், முதலமைச்சர் விஜய் அவர்களை பல தலைவர்கள் சொற்களால் துளைத்து எடுத்துவிட்டனர் என்றார்
இருப்பினும்
10 மணி நேரத்திற்குள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்த
17 பேரையும் கைது செய்த காவல்துறையை பாராட்டுகிறேன் என்றும் வைகோ தெரிவித்தார்.
தமிழகத்தில் நாள்தோறும் கொலையும் கற்பழிப்பும் பாலியல் குற்றங்களும் காவல் நிலையத்தில் கொடுமைகளும் நடப்பதாக பல தலைவர்கள் நாள் தவறாமல் அறிக்கை விடுகின்றனர் என்ற அவர்,
அதிமுக எம்ஜிஆர் மறைவிற்குப்பின் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், அதற்குப் பின் டாக்டர் கலைஞர் ஆட்சிகாலத்தில் அதற்கு பின்பு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்திலும், ஸ்டாலின் ஆட்சி காலத்திலும் இதே போல நாள் தவறாமல் கொடும் குற்றங்கள், கொலைகள், கற்பழிப்புகள், காவல் நிலைய சித்ரவதைகள், மரணங்கள், பாலியல் கொடுமைகள் ஆகியவை நடந்து கொண்டுதான் இருந்தன என்றும் வைகோ கூறினார்
கடும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு மனித சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்களாக இருக்கும் கொடியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பெரும்பாலும் அவர்கள் ஜாமீனில் வந்து விடுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
இதற்கு முன்பு தூத்துக்குடி சிறுமியை கொன்ற கொடியவர்கள் கண்டுபிடித்து தண்டிக்கப்பட்ட நிலையில் அவர்களும் அவர்களை போன்றவர்களும் ஆறு மாதத்தில் ஜாமினில் வெளிவந்து மீண்டும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் இவர்களை போன்றவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 16 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதை விட அக்கிரமம் என்ன இருக்க முடியும் என்ற அவர், ஆனால் தமிழகத்தில் எந்த சம்பவம் நடந்தாலும் அவர்கள் இந்த ஆட்சி மீது பழி போடுகின்றனர் என்றார்.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான ஆட்சி மூன்று மாதம் தான் ஆறு மாதம் தான் என சிலர் கூறுகின்றனர் என்று கூறிய வைகோ,
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இந்த ஆட்சி நீடிக்கும் என்றும் வரும் தேர்தல்களிலும் வெற்றி பெறும் என்றும்
இந்த எஸ் ஐ ஆர் விவகாரம் மட்டும் இல்லை என்றால் இன்னும் 30 சீட்டுக்கு மேல் விஜய் ஜெயித்திருப்பார் என்றும் வைகோ தெரிவித்தார்.
முதல்வர் விஜய் பசும்பொன் வராதது குறித்த கேள்விக்கு?
எல்லா முதல்வர்களும் எல்லா காலத்திலும் வந்துள்ளனரா என்றும் முக்குலத்தோரின் ஓட்டுக்காக மட்டுமே வருவார்கள் மக்களின் ஆதரவு வேண்டுமென்ற காரணத்தினால் வருவார்கள் என்ற அவர்.
பொதுமக்களுக்கு நெருக்கடி ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் முதல்வர் விஜய் வரவில்லை என்றும் அமைச்சர்கள் மூன்று நான்கு பேர் வருவார்கள் என்றும் வைகோ கூறினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் கைது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,
என்ன நடந்தது என்பதும் அது உண்மையா என்பது குறித்தும் தமக்கு தெரியாது என்ற அவர்
எனது மனதிற்கு சங்கடமாகதான் உள்ளது என்றாலும் என்ன என்பதை நீதிமன்றம் முடிவு சொல்லும் என்றும் மதிமுக பொதுச்செயலா வைகோ தெரிவித்தார்.