தமிழகத்தின் உள்ளூர் செய்திகள், மாவட்ட நிகழ்வுகள் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள்.

திமுக தீர்மானக்குழு மாநில செயலாளர் நா.கார்த்திக்  மனு

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் முடங்கிக் கிடக்கும் அடிப்படை வசதிப் பணிகள் – மாநகராட்சி ஆணையரிடம் திமுக தீர்மானக்குழு மாநில செயலாளர் நா.கார்த்திக்  மனு

திரளானபெண்கள்

கோவையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – திரளான பெண்கள் பங்கேற்பு

கடந்த 2 மாதங்களில் ரூ.25 கோடி இழப்பு

அட்டைப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடந்த 2 மாதங்களில் ரூ.25 கோடி இழப்பு – தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வேதனை

ஞாணேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது.

ஞாணேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது. 

வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கோவையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் மீதான காவல்துறையின் கொடூர தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் போராட்டக்காரர்கள் மீதான காவல்துறையின் கொடூர தாக்குதலை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்! 

50,000 சாவித் தொழிலாளர்களுக்கு நலவாரியம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 50,000 சாவித் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக் தமிழக அரசிடம் கோரிக்கை,

கூட்டணி என்பது வதந்தி மட்டுமே

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி என்பது வதந்தி மட்டுமே - பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி...

கோவையில் அரிகேன் விளக்குடன் அதிமுக கவுண்சிலர்கள் ஆர்ப்பாட்டம் பரபரப்பு.

கோவை மாநகராட்சியில் தொடரும் அவலம்: தெருவிளக்கு கூட மாற்ற முடியாத மோசமான நிலையில் தமிழக அரசின்  நிர்வாகம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உடனே அமல்படுத்தக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்! 🚩

நீதிமன்ற தீர்ப்பின்படி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை உடனே அமல்படுத்தக்கோரி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனிதநேயம் வளர வேண்டும் என்றால் மனிதர்களிடையே கருணை, இரக்கம், அன்பு ஆகிய பண்புகள் வளர வேண்டும்

மனிதநேயம் வளர வேண்டும் என்றால் மனிதர்களிடையே கருணை, இரக்கம், அன்பு ஆகிய பண்புகள் வளர வேண்டும்

“இது ஆரோக்கியமான ஜனநாயகம் இல்லை!”

மக்கள் தீர்ப்பை வரவேற்கிறோம்- ஆரோக்கியமான ஜனநாயகமாக இது இல்லை” – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி....

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், .

இடைத்தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், மக்கள் அளித்த தீர்ப்பை வரவேற்பதாகக் குறிப்பிட்டார். பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே வெற்றி பெறுவது வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், இதுபோன்ற தேர்தல் நடைமுறைகள் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என்றும் தெரிவித்தார்.

தேர்தலில் இரண்டாவது இடம், மூன்றாவது இடம் என்பதைத் தாங்கள் பெரிதாகப் பார்ப்பதில்லை என்றும், வெற்றி அல்லது தோல்வி என்பதையே முக்கியமாகக் கருதுவதாகவும் கூறினார். ஆளுங்கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையிலும் தேர்தல் முடிவுகளைப் பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும், முன்பு வீட்டை விட்டு வெளியே வருமாறு கூறிய நிலையில், தற்போது வீதிக்கு வந்து இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி எழுப்பும்போது பதிலளிப்பதில் தயக்கம் இருப்பதாக விமர்சித்தார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டையும், ஆட்சிக்கு வந்த பிறகு வேறொரு நிலைப்பாட்டையும் சிலர் எடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

எஸ்ஐஆர் விவகாரம் குறித்துப் பேசிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்குப் பிறகுதான் கேரளாவில் வெற்றி கிடைத்ததாகக் குறிப்பிட்டார். மேலும், 12 கோடிக்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவர்களில் 2 கோடி பேர் உயிரிழந்தவர்கள் என்றும் அவர் கூறினார். இந்த எண்ணிக்கைகள் தொடர்பான விரிவான விவரங்கள் குறித்துப் பேட்டியில் அவர் கருத்துகளை முன்வைத்தார்.

தமிழக முதலமைச்சர் தொடர்பாகப் பேசிய நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் இல்லத்திற்கு எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று  வருவதாகவும், அவரது வீட்டில் உணவருந்துவதாகவும் குறிப்பிட்டார். இதனால் முதலமைச்சரின் நேரம் வீணாவதாகவும் விமர்சித்தார். ராகுல் காந்தி இந்தியாவை விட்டு வெளியேறினால் எந்தப் பிரச்சினையும் இருக்காது எனக் கருத்துத் தெரிவித்தார்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்